புதன், 12 ஜூலை, 2017

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்(பகுதி -2)

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்(பகுதி -2)

மனம் என்பது என்றும் வற்றாத ஜீவ நதி.

அது எங்கோ புறப்படுகிறது

புறப்பட்ட இடத்திலிருந்து கடலை நோக்கி ஓயாமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது.

அது யாருக்காகவும் தன் போக்கை
மாற்றிக்கொள்வதில்லை.

அது சில நேரம் இந்த மூட மனிதர்கள் அதற்க்கு
செய்யும் துரோகத்தை பொறுமையுடன்
கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால்  எல்லாவற்றையும் சேர்த்து வட்டியும் முதலுமாக
அவனுக்கு பாடம் கற்பிக்கிறது. 

இருந்தாலும் அவன் திருந்துவது கிடையாது

ஒரு ஜீவ  நதி பல கோடிக்கணக்கான உயிர்களுக்கும் அதன் கரையில்
வாழும் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் தொடர்ந்து
நன்மைகளை செய்து அனைவரின்  வாழ்வில் நன்மை சேர்க்கிறது.

ஒரு நதியில் அதை சுத்தப் படுத்தும் மீன்களும்  இருக்கும். அதை தின்று வாழும் திமிங்கிலங்களும்   சுறாக்களும், பாம்புகளும் இருக்கும்.

அது நன்மை செய்வதையே குறிக்கோளாக கொண்டு காலம்காலமாக
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதை யாரும்கட்டுப்படுத்த இயலாது.அதை படைத்த இறைவன் ஒருவனால்தான் முடியும். அவனும் அதன் ஓட்டத்தை என்றும் தடை செய்வது கிடையாது.

அதுபோல்தான் நம்முடைய மனமும்.

அது  நிற்காமல்   ஓடிக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வற்றாத மாபெரும் சக்தியை நாம் பயன்படுத்திக்கொள்வதில்தான்.நம்
வாழ்க்கையின் குறிக்கோளும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.(தொடரும்) .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக