சனி, 10 டிசம்பர், 2016

பாரதி பிறந்த தினம்

பாரதி பிறந்த தினம் 




பாரதி பிறந்தான்.
பார் அதிர தமிழ் கவிதைகளை
காற்றில் உலவ விட்டான்

சுதந்திரம் வேண்டி நின்றான்
நாட்டிற்கும் தனி மனிதனுக்கும்

ஓட ஓட விரட்டியடித்தது
ஆளும் வர்க்கம்
அதற்கு  பயந்து ஆதரவு
கரம் நீட்ட மறுத்தது
அடிமைகள்  கூட்டம்.

அதனால் அவன் அடைந்தான்
சொல்லொணா துன்பம்

துன்பத்திலும் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா "
என்று பாடினான்

வறுமையில் வாடியபோதும் 
அவன் வாடாமலர்போல் வாழ்ந்து 
நாட்டின் வண்ணமிகு  எதிர்காலத்தை 
வருமுன் உரைத்தான் 

அவனைப் போல் இனியொரு வீரம்
தீரம் மிக்க கவிஞன்  இந்த
உலகத்தில் பிறக்கப்போவதுமில்லை
அதுவரை அவன் புகழ் மறைய
போவதுமில்லை. 

மகா கவி பாரதியின்  பிறந்த தினம் 
உலக மக்களே சற்று நினைத்து 
பாருங்கள் ! அவன் முற்போக்கு சிந்தனைகளை 
எண்ணி எண்ணி வாழ்வில் மேம்பாடு 
அடைய வாருங்களே !

2 கருத்துகள்:

  1. Dear Pattabi,

    Without using any force, without using any gun or weapon, he was able to drive out the Britishers merely by his poems. We need more such Bharatis to bring unity among our politicians.

    Krishnan

    பதிலளிநீக்கு
  2. பாரதியின் நினைவை பார் மறந்து விட்டது நண்பரே

    பதிலளிநீக்கு