வெள்ளி, 29 ஜூலை, 2016

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம் 



                                     ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


சத்குரு நாதன் திருப்பாதம்தன்னை
எப்போதும் தன் சிந்தையில்
நினைந்திருப்போருக்கு
வாழ்வில் சங்கடம் வருமோ அய்யா

சாத்திரங்கள் பல கற்றாலும்
தோத்திரங்கள் பல செய்தாலும்
ஆத்திரம் கொண்டோருக்கு
வாழ்வில் என்றும் அமைதி உண்டோ

கண்ணுக்கும் புலனுக்கும் புலப்படா
இறை சக்தி நம் முன் வெளிப்படுவது
சத்கு ருவின் திருவடிவமே என்பதை
உணர்ந்துகொண்டு அவன் பாதம்
சரணடைந்தவருக்கு துன்பம்ஏது !
துயரேது !

தத்துவம் தெரிந்தும் இறைவனின்
மகத்துவம் புரிந்தும் இன்னல்கள் வரும்போது
அலைபாயும்  மனதுடன் இங்குமங்கும்  ஓடி திரிந்து
பிதற்றி திரிவார் இவ்வுலகில் பலர்.

வினைதான் விதியாய் உருவெடுத்து நம்
வாழ்வில் விளையாடுகிறது என்றும் அதை
அமைதியாய் அனுபவித்து தீர்த்து
அந்த ஈசன் நினைவாகவே இருப்பர்
உண்மை அறிந்தவர்.

சஞ்சலமில்லா மனம் இல்லை
சங்கடமில்லா வாழ்வில்லை
பிணியில்லாத உடல் இல்லை
அவன் அருளின்றி இவ்வுலகம் இல்லை

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்
பற்றிடுவோம்.
மாயையை அகற்றும்
சத்குருநாதன் அமுத மொழி செவி மடுப்போம்
இன்னல் நீங்கி இன்ப வாழ்வு பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக