ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும் (6)

புச்சுக் குட்டியும் நானும் (6)


பூனைக் குட்டிகள் அழகு தேவதைகள்

அந்த மூன்று பூனைக்குட்டிகளும்
நான் எப்போது பார்த்தாலும்
ஒன்றாகத்தான் இருக்கும்.

நான் படம் பிடிக்கும்போது அழகாக
போஸ் கொடுக்கும்

அப்படி பிடித்த ஒரு அழகான படம்.  ஒன்று
அதற்க்கு ஒரு தலைப்பு கொடுத்தேன்

"நாங்கள் எப்போதும் ஒற்றுமையாய் இருப்போம்.நீங்கள்?





எனக்கு உன் மீது கோபம்..ஏன் என்னை 
உன் மடியில் உட்கார வைக்க மறுக்கிறாய்?


ஒரு நாள் இரவு கதவைத் திறந்து பார்க்கும்போது மூன்று குட்டிகளும் கிணற்றின் மேல் போடப்பட்டுள்ள  வலையின்மீது இரண்டு முன்னங்கால்களையும் கைகளை கூப்பிக்கொண்டு உறங்கியதை கண்டவுடன் என் மனதில் ஒரு கருத்து  தோன்றியது. 

இறைவனை வணங்கிய  கையோடு   உறங்க செல்ல வேண்டும். என்ற கருத்துதான் அது. அணைத்து சிந்தனைகளையும் ஒதுக்கிவிட்டு நாமும் அவ்வாறு செய்தால் நிம்மதியான  உறக்கம் வரும் 




2 கருத்துகள்:

  1. நாங்கள் எப்போதும் ஒற்றுமையாய் இருப்போம்.நீங்கள்?

    வணங்கிய நிலையில் உறங்கும் பூனைக்குட்டிகள் மனம் கவர்ந்தன.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் சுகமாக உறங்குவதற்கு பல லட்சங்கள் செலவு செய்கிறோம். அப்படியும் நமக்கு உறக்கம் வருவதில்லை.பாதுகாப்பாக உறங்குவதற்கு எத்தனையோ வழிமுறைகளை கையாளுகிறோம். அப்படியும் நமக்கு பாதுகாப்பில்லை.

      ஆனால் இயற்கையில் செல்லக் குழந்தைகள் இயற்கை தாயின் மடியில் அனைத்தையும் மறந்து ஆனந்தமாக நிம்மதியாக உறங்குகின்றன

      நாம்தான் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டோம். நாம் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை தந்த சொத்தை ,ஆனந்தத்தை, ,மகிழ்ச்சியை, இழந்து செயற்கையான, போலியான வாழ்வில் நடித்துக்கொண்டிருக்கிறோம். மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் எல்லாம் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன. அவைகள் பிற உயிர்களை தன் உணவுக்காக,மற்றும் பாதுகாப்புக்காக மட்டும்தான்
      எதிர்க்கும் அல்லது கொள்ளும். ஆனால் மனித மிருகங்கள் தன் சுயநலத்திற்காக பிற உயிர்களுக்கு
      துன்பம் விளைவிக்கின்றான். காரணமின்றி கொன்று குவிக்கின்றான்.
      என்ன செய்ய?
      நாமும் அரங்கனை வணங்கிய நிலையில் உறங்க சென்றால் இரவும் நலமாக போகும்,காலை வரவும் நன்றாக இருக்கும், உறவுகளும் சீர்படும். முயற்சி செய்வோம்.

      நீக்கு