செவ்வாய், 15 அக்டோபர், 2013

நர்மதை பெற்ற நகர் (4)

நர்மதை பெற்ற நகர் (4)

நர்மதை பெற்ற நகர் (4)





சிறுவன் எந்த பதட்டமுமின்றி
உண்மையை குருவிடம்
கூறத்தொடங்கினான்.

"குருவே!தந்தை மட்டுமல்ல ,
தான் யாருக்குப் பிறந்தவன் என்று
என் தாயாருக்கே தெரியாது "
என்று தன்  தாயார் தெரிவித்ததை
கள்ளம்கபடமின்றி
தெரிவித்துவிட்டு குருவின்
ஆணைக்காக காத்து நின்றான்.

உடனே அங்கிருந்த மற்ற சீடர்கள் அனைவரும்
கொல்லென்று கேலியாகச்  சிரித்தார்கள்.

அவர்கள் எதற்கு சிரித்தார்கள் என்று
அவர்களுக்கும் தெரியாது.
அந்த சிறுவனுக்கும் தெரியாது.

உடனே அவர்கள் அனைவரையும்
அடக்கிவிட்டு மகரிஷி கூறினார்.

குழந்தை! ஒளிவு மறைவின்றி ,
சற்றும் கூச்சப்படாமல் ஓர் உண்மையை
நீ உரைத்ததைக் கேட்டு அகமகிழ்கிறேன் .

உண்மையே உரைப்பது என்ற
அருங்குணம் படைத்தவர்கள்
அந்த பரம்பொருளாகிய பிரம்மத்தை
அறிந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

அவர்களையும் நீ மிஞ்சிவிட்டாய் !

இயல்பாகவே இவ்வருங்குணம் கொண்ட
உன்னை என் சீடனாக ஏற்பதில்
மிக்க மகிழ்ச்சியடைகிறேன்
என்று சொன்னார்

நான் அறிந்த அத்தனை சாத்திரங்கள்
அனைத்தையும் உனக்கு
போதிக்கிறேன் என்று கூறினார்.

இப்பேர்ப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட
குருவோ ஆசிரியர்களோ
தற்காலத்திலெங்காவது  காணமுடியுமா?

சிறுவனின் நிலையை அறிந்த பின்பும்
அவனை இழிவு செய்யாது
அவனை உற்சாகபடுத்தி அவனை வாழ்வில்
உயர்வடையச் செய்ய வேண்டும்
என்ற உத்தம குணம் கொண்ட மனிதர்கள்
மகான்களாகத்தான்  இருக்க முடியும்.

சமீப காலத்தில் உண்மையின் மாண்பை
பறைசாற்றி தன்  வாழ்வில்
 வாழ்ந்து  காட்டியதால் அல்லவோ
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
உலகோர் அனைவராலும் மகாத்மா
என்று போற்றப்படுகிறார் அவர் வாழ்வில்
நாணயத்தினை  கடைபிடித்ததால் அல்லவோ
அவர் உருவம் நாணயத்திலும் ரூபாய் நோட்டுக்களிலும்
 நமக்குள் சாட்சியாய் உறையும்
உண்மை இறைவனைப் போல் விளங்குகிறது

நம் நாட்டில் உத்தமப் பண்புகள்
அழிந்துகொண்டு வருகின்றன.

தீய ,வக்கிர சிந்தனைகள் மட்டும்
அழியா வரம்பெற்று அன்றும் இன்றும்
சிரஞ்சீவியாய் மக்கள் மனதில் தொடர்ந்து
ஆதிக்கம் செலுத்தி வருகின்றன

இந்நிலைமை மாறவேண்டும் என்றால்
அது பெற்றோர்கள் கையிலும்,
அவர்களை தொடர்ந்து ஆசிரியர்கள் கையிலும்
அவர்களை தொடர்ந்து நம் நாட்டை
வழி நடத்தி செல்லும் தலைவர்கள்
கையிலும்தான் உள்ளது.

அதைவிடுத்து வெட்டி போராட்டங்கள்
நடத்தி விளம்பரம் தேடும் கூட்டங்கள்
பெருகிவிட்டது இந்நாளில்

பரவசமானான் பாலகன்!

அடுத்து என்ன நடந்தது ?
நாளை வரும்.

pic-courtesy-google images 

2 கருத்துகள்: