புதன், 26 ஜூன், 2013

வள்ளலார் கொள்கைகள் படும் பாடு.

வள்ளலார் கொள்கைகள்
படும் பாடு. 





எல்லா உயிரும் இன்புற்று வாழ்க 
கொல்லா விரதம் குவலயத்தில் ஓங்குக


ஆனால் அவர் கொள்கைகள் மண்ணில்
புதைக்கப்பட்டுவிட்டன
அவரும் காணாமல் போய்விட்டார்.
கொல்லா விரதத்தை
கைகொள்ள சொன்னார்
வள்ளலார்

இன்றோ காணும்
திசையெல்லாம் புலால் நாற்றம் .

இரவு பகல் என்னாது அப்பாவி உயிர்களை
கொன்று வேகவைத்து,சுட்டு தின்று வயிற்றை சுடுகாடாக்கிகொண்டிருக்கிறது.
ஒரு நாள் சுடுகாட்டில் வேகப்போகும்
இந்த இரக்கமற்ற மிருக குணம்
கொண்ட மானிடர் கூட்டம்.

உள்நாட்டில் இருக்கும்
கசாப்பு கடைகள் போதாது என்று
பன்னாட்டு பன்னாடை நிறுவனகள்
இன்று பதப்படுத்தப்பட்ட
மாமிசங்களை விற்று கொழுக்கின்றன.
அதற்க்கு கோடிக்கணக்கான ரூபாய்
செலவில் விளம்பரங்கள் வேறு.

தொலைகாட்சிகளிலும் சரி,
திரைப்படங்களிலும்  சரி,திரைப்பட  பாடல்களிலும் ,
வசனங்களிலும் கூட அசைவ நாற்றம்தான் வீசுகிறது
ஊடகங்களிலும் சரி எங்கும்
பிண வாடைதான்.வீசுகிறது

இந்த கூட்டத்தில் தை பூசம்
அன்று வடலூருக்கு சென்று வள்ளலாருக்கு
ஆண்டுதோறும் அவர் கொள்கைகளுக்கு
திதி  கொடுத்து வருபவர்கள் பெரும்பாலானோர்.

வள்ளலாரை போற்றுபவர் சிலரோ
வெள்ளை நிற உடை தரித்து
விளக்கு  பூஜை செய்து தங்கள் கடமையை
முடித்துக் கொள்கின்றனர்.
சிலர் வலையில் தங்கள் கொள்கைகளை
பரப்பிவிட்டு ஆறுதலடைகின்றனர்.

கண்மூடி பழக்கம் 
மண் மூடிப் போக என்றார் வள்ளலார்.

இன்று ஒவ்வொரு ஜாதியினரும், பிரிவினரும்,
மதத்தினரும் அவர்கள் குல வழக்கம் என்று
வழிபாடுகளில் கடைபிடிக்கும் ,
அநாகரீகமான, மூடத்தனமான ,
இரக்கமற்ற,காலத்திற்கு
ஒவ்வாத செயல்களைக் கண்டு
 இரக்கமுள்ளோர்  மனம் பதைபதைக்கிறது.

அதை செய்திகளாகவும்,
 பிரத்தியேக காட்சிகளாகவும்
ஒளிபரப்பி வேறு காட்டுகின்றன
தொலைகாட்சி நிறுவனங்கள்.
இந்த செயல்களை
வேறு நியாயப்படுத்துகின்றன

மற்ற உயிர்கள் இருக்கட்டும்.
இன்று மனித உயிர்களுக்கே  மதிப்பில்லை .
விபத்துகளால் மாய்கிறது பல ஆயிரம் பேர்
போர், கலவரம், தீவிரவாதிகளின்
அடாத செயல்களினால் லட்சக்கணக்கில்
காரணமின்றி கொல்லப்படும்
செயல்கள் அதிகரித்துவிட்டன.

போதாக் குறைக்கு இயற்கை சீற்றங்களான
எரிமலை சீற்றம், ஆழிபேரலை  பூகம்பம்,
வெள்ளம்,  நில சரிவு, சுனாமி, தீ, புயல், சூறாவளி
 என ஏராளமானவை லட்சக்கணக்கில்
உயிர்களை கூண்டோடு அழிக்கின்றன.


அன்பில்லாதவர்கள் என்பு தோல்
போர்த்திய மனிதர்கள் என்றார் வள்ளுவர்.

இன்று உலகில் மொத்த மக்கள் தொகையில்
90 விழுக்காடுகள் அவர்கள்தான் இருக்கிறார்கள் போலும்.


ஜாதிகள் சண்டைகள் ஒழியவேண்டும் என்று
கூறிய வள்ளலாரின் கொள்கைகளை செயல்படுத்த
சில அரசுகள் சட்டம் இயற்றினால்
அதற்க்கு ஜாதி மற்றும் மத சாயம்
பூசப்படும். சட்டத்திற்கு சட்டம் மாட்டப்பட்டு
கிடப்பில் போடப்பட்டுவிடும்.

அரசு இதில் கைவைத்தால் கையை
சுட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.
அதனால் கலவரம் மூண்டு பல்லாயிரம்
 உயிர்கள் மாயும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

காணாமல் போன வள்ளலார்
காணாமல் போனவராகவே இருக்கட்டும்.
அவர் வானுலகில் நிம்மதியாக
இந்த மண்ணுலக காட்சிஎல்லாம் காணாமல்.

6 கருத்துகள்:

  1. ஒவ்வொன்றும் உண்மை வரிகள்... வருந்த வேண்டிய வரிகளும் கூட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலங்குகள் அவைகளுக்கென
      குறிப்பிடப்பட்ட உயிர்களை மட்டும்
      பசிக்காக வேட்டையாடுகின்றன

      ஆனால் மனிதன் ருசிக்காகவே
      அனைத்து உயிரினங்களையும்
      கொன்று தின்கின்றான்.

      மனிதர்கள் விலங்குகளையும்
      மற்ற உயிரினங்களையும்
      தன் உணவாகக் கருதாமல்
      தன்னைப்போல் ஒரு உயிர் என்று
      கருதும் மனோபாவத்தை
      என்று கைகொள்ளுகிரானோ
      அதுவரையில் இந்த
      கொடுமைகள்
      நீடிக்கத்தான் செய்யும்..

      நீக்கு
  2. வாடிய பயிரைக்
    கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்.
    வள்ளலாரை மறந்தோம்
    அவர்தம் போதனைகளைத்
    துறந்தோம்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பயிர் செய்யும்
      உழவனுக்கும் மதிப்பில்லை
      வீடுகளில் வயதான்
      கிழவனுக்கும் மதிப்பில்லை
      உயிர்களுக்கும் மதிப்பில்லை.

      நீக்கு
  3. நமஸ்காரம்.வீணாக கோபம்,டென்ஷன் ஆகாதீர்கள்..."ஈமு கோழி கதை என்ன ஆனது..இதை வளர்த்தால் கோடீஸ்வரன் ஆகலாம்..1 முட்டை சாப்பிட்டால் அசுரபலம் கிடைக்கும்...(ஏற்கனவே அசுரகுணம் இருக்கு)என அமோக விளம்பரம்..வங்கிகள் கூட இலட்ச கணக்கில் கடன் தந்தது? இன்று???? 1 முருங்கை காய் 7ரூபாய்..கீரை 1கட்டு 10ரூபாய்...அடிக்கடி வந்து போகும் "பன்றிகாய்ச்சல்...பறவை காய்ச்சல் "இதையும் மீறி புலால் உண்ண ஆசையா "? தாரளமாக சாப்பிடு...வருவதை அனுபவி.கோழியின் எடை கூட,ஆடு மாடு எடைகூட,ஹார்மோன் injection போடபடுகிறது...அதையும் சேர்த்து அனுபவி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒன்றும்
      டென்ஷன் ஆகவில்லை

      இந்த யதார்த்தத்தை
      காண்பவர்கள் மனதில்
      நிச்சயம் இந்த உண்மைகள் என்றாவது
      ஒருநாள் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் .

      பல மாதம் முன்பு வள்ளலார்
      பற்றிய பதிவு ஒன்று போட்டேன் .
      அப்போது நான் வள்ளலாரை பற்றி
      தவறாக சித்தரிப்பதாக கருத்து
      தெரிவித்திருந்தனர் சிலர் .

      அதற்க்காகதான் மீண்டும்
      அவரை பற்றிய ஒரு பதிவிட்டேன் .

      உண்மை கசக்கத்தான் செய்யும் .

      இறைவனின் லீலைகளை
      உணர்ந்தவர்கள் எந்த நிகழ்வுக்கும்
      கலங்கமாட்டார்கள் .

      நீக்கு