செவ்வாய், 11 டிசம்பர், 2012

கல்லூரிக்கு செல்ல இருந்தவர்கள் கல்லறைக்கு சென்றார்கள் யார் காரணம்?


சனி, 24 நவம்பர், 2012

கல்லூரிக்கு செல்ல இருந்தவர்கள் கல்லறைக்கு சென்றார்கள்

யார் காரணம்?


இந்த பதிவை போட்டு 

ஒரு மாதம் கூட ஆகவில்லை

அதற்குள் இந்த கோர சம்பவம் நடந்துவிட்டது. 


கல்லூரிக்கு செல்ல இருந்தவர்கள் 

கல்லறைக்கு சென்றார்கள்


இதற்க்கு பொறுப்பற்ற மாணவர்களும்

பேருந்து நிர்வாகமும்,மக்கள் நலனில் அக்கறையில்லா அரசுகளும்தான் காரணம்?


இரு தினங்களுக்கு முன்பு பேருந்தின்

 படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் 

செய்த நான்கு மாணவர்கள் பக்கத்தில்

உரசிக்கொண்டு சென்ற லாரியில் சிக்கி மரணம்


இளங்கன்று பயமறியாது என்பார்கள்.

கல்லூரி செல்லும் பிள்ளைகள் 

என்னதான் அறிவுறுத்தினாலும் 

ஏற்றுக்கொள்ளபோவதில்லை


அரசாவது இனி எதிர்காலத்தில் 

இது போன்ற சாவுகளை தடுக்க எண்ணம் 

கொள்ள நினைத்தால் இனிமேல் 

அனைத்துபேருந்துகளுக்கும் 

கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்பட்டு 

இயக்கப்படவேண்டும். 


கூட்டத்தை பொருத்து கூடுதல் பேருந்துகளை

இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் 


இல்லையேல் இதுபோன்ற மரணங்கள் தினசரி வாடிக்கையாகிவிடும். 


இந்த எச்சரிக்கை ரயில் வண்டிகளிலும் கண்டிப்பாக அமல்படுத்தப்படவேண்டும். 


செய்வார்களா?என்பது கேள்விக்குறியே!



கல்வி கற்க பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் படும் பாடுதான் மேல கண்ட படம்



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


இன்று வரைந்த ஓவியம்



கல்வி கற்க பள்ளி செல்லும் குழந்தைகள் 
தினமும் படும் பாடுதான் மேல கண்ட படம் 

இந்த படம் எதை குறிக்கிறது

1.ஆடுமாடுகள் போல் முண்டியடித்துக்கொண்டு 
பேருந்தில் ஏறும் இந்த குழந்தைகள் .
ஒரு சிறுமி ஏறமுடியாமல் தரையில் நிற்கிறாள்
ஒரு சிறுவன் முன் பக்கம் சென்றால் இடம் கிடைக்குமா 
என்று ஓடுகிறான்
இந்த நிலைமை என்று மாறும்?

2 பேருந்து வந்து நின்றதும் வரிசையாக நின்று
ஒவ்வொருவராக பேருந்தில் ஏற வேண்டும் 
என்ற ஒழுக்க நெறியை கடைபிடிக்க கற்று தராத 
ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது

3 பள்ளி செல்லும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர தக்க நடவடிக்கை எடுக்காத,கையாலாகாத போக்குவரத்து நிறுவனங்களும், பொறுப்பற்ற ஊழல் அரசுகளின் நிலையையும் குறிக்கிறது

4 பல ஆயிரம் கோடி ரூபாய்களை கல்விக்காக செலவழிக்கும் அரசுகள் குழந்தைகள் சௌகரியமாக பள்ளிக்கு சென்று வர தகுந்த பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்யாதது எதிர்கால சந்ததிகளின் மேல் அரசும்.  மக்களும் காட்டும் அலட்சியத்தை காட்டுகிறது

5.சிறுவயதிலேயே ஒழுங்கை கடைபிடிக்காத இந்த இளைய சமூகம் எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக விளங்கும் என்று எப்படி நம்ப முடியும். 

6 அதனால்தான் நம் நாடு இன்று இத்தனை அலங்கோலங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது . 

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக