செவ்வாய், 11 டிசம்பர், 2012

இன்று மகாகவி பாரதிக்கு வயது 130





இன்று மகாகவி பாரதிக்கு வயது 130

அன்று பாரதி உழைத்து
தமிழுக்கு பெருமை சேர்த்தான்

இன்றோ தமிழை வைத்து
பிழைக்கும் கூட்டம் பெருகிவிட்டது.

பாரதியின் செந்தமிழ் தேனாக இனித்தது
இன்றோ தமிழை தமில் என்றும்
வாழைபழத்தை வாலை பலம் என்றும்
வெட்கமில்லாமல் தமிழை கொலை செய்கின்றனர்.
புலவர் பட்டம் பெற்றவர்களே

எங்கெங்கும் காணினும் சக்தியடா என்றான் பாரதி
இன்றோ எங்கெங்கும் காணினும் குப்பையடா
என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது தமிழகம்

நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறனின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதி
பாடியது பலித்துவிட்டது

நம் நாடு இந்த வாய்ப்பந்தல்
போடுபவர்களிடம் சிக்கி தவிக்கிறது.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை
கொளுத்துவோம் என்றான் பாரதி.
இன்றோ மாமியார்கள் மருமகளையே
கொளுத்துகிறார்கள் வர தட்சிணை
கொண்டு வரவில்லை என்று.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் கற்பு
என்றான் பாரதி
ஆனால் இன்று நடப்பது காதலித்து
கைவிடப்பட்ட பெண்கள்
கற்பிழந்த பெண் பெற்ற சிசுவை
குப்பை தொட்டியில் வீசி எறிகின்றாள்
 சமூகத்திற்கு பயந்து

தனி மனிதனுக்கு உணவில்லை
என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான்  அவன் அன்று தான்
வறுமையில் வாடிய போதும்

இன்றோ ஆயிரக்கணக்கில் பட்டினி கிடக்கின்றார்
ஒரு வேளை கஞ்சிக்கும் வழியின்றி
உணவு கிடங்குகளில் உணவு பொருட்கள்
மக்கி போக விட்டுவிட்டு.


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா
என்றான் அவன் துன்ப கடலில் மூழ்கியபோதும்.

ஆனால் இன்றோ அற்ப காரணங்களுக்காக 
நெஞ்சில் உரமின்றி காரணமின்றி
உயிரை மாய்த்து கொள்ளும்
கூட்டம்  பெருகிவிட்டது


இவையெல்லாம் என்று நீங்கும்?




.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக