திங்கள், 29 அக்டோபர், 2012

அடிமாடுகளின் ரத்தக்கண்ணீர்


அடிமாடுகளின் ரத்தக்கண்ணீர்













அடிமாடுகளின் ரத்தக்கண்ணீர்

தினந்தோறும்தமிழ்நாட்டிலிருந்தும் 
மற்ற மாநிலங்களிருந்தும் லட்சக்கணக்கான 
மாடுகள் இறைச்சிக்காக கேரளாவிற்கு 
லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன

அவைகள் அங்கு ஈவிரக்கமின்றி 
கொடூரமாக கொலை செய்யப்பட்டு
அதன் இறைச்சிகள் வளைகுடா நாடுகளுக்கும்
மற்றும் கீழை நாடுகளுக்கும் 
ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இன்று உலகில் அசைவ உணவு உண்போர்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது
.
நம் வீட்டில் நமக்கு பலவகையிலும்
பயன்தந்துவிட்டு இனி பயன் இல்லை
என்ற நிலையில் அவைகளை
மாட்டு சந்தையில் விற்றுவிடுவது
நன்றி கெட்ட செயலாகும்
.
நாம் உண்ணும் உணவின்
கழிவுகளை மட்டும் அவைகளுக்கு
உணவாக அளித்தாலே அவைகள்
கடைசி காலம் வரை காலம்தள்ளும்
.
இறந்த பிறகு அவைகளை
இறைச்சி கூடத்திற்கு அனுப்புவதில்
எந்த பிரச்சினையுமில்லை
.
ஆனால் அவைகளை ஈவிரக்கமின்றி
ஒரே லாரியில் அடைத்து சென்று
இறைச்சிக்கூடத்தில் இரும்பு சம்மட்டியால்
தலையில் அடித்து கொல்லும் கோரக்காட்சி
சில மாதங்கள் முன்பு 
அம்ரிதா தொலைகாட்சியில்
ஒளிபரப்பப்பட்டது
.
எனவே தாங்கள் ஆசையோடு
வளர்த்த மாடுகள் கேரளாவில் போய்
கொடூரமாக சாகத்தான் வேண்டுமா
என்பதை அதை விற்பவர்கள்
சிறிது சிந்தித்து பார்த்தல் நலம்
.
ஆனால் அசைவ உணவு உண்பவர்கள்
மனித நேயத்தை பற்றி பேசத்தான் முடியுமே தவிர
அதை அவர்களால் உணர வாய்ப்பில்லை
.
அருட்ப்ரகாச வள்ளலார் கொல்லா விரதத்தை
கைகொள்ள வலியுறுத்தினார்
ஆனால் அதை கடைபிடிப்பவர்கள்
இவ்வுலகத்தில் வெகு சிலரேயாவர்
.
பசுவை காமதேனு என்றும் , கோமாதா என்றும்
,பசுக்களை பராமரித்து நேசித்த கண்ணபிரானை தெய்வம்
என்றும் போற்றி வணங்கும் நம் ஹிந்து சமுதாயம்
இந்த கொடுமையை கண்டும் காணாமல் இருப்பதும்
பெரும்பாலானோர் அதன் இறைச்சியை உண்டுவிட்டு
அவனுக்கு பூஜை செய்வதும் கேலிக்குரியதும்
கண்டனதிர்க்குரியதும் ஆகும்

அவர்கள் இன்று வளமாக வாழ்ந்தாலும்
அது நிச்சயம் போலியானதாகத்தான் இருக்கும்
அதன் விளைவுகளை அவர்களோ அல்லது
அவர்களின் சந்ததிகளோ ஒரு நாள்
அனுபவித்துதான் தீரவேண்டும்
என்பது இறைவன் வகுத்த விதி

மேலும் ரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் 
நம் மண் வளத்தை நாசபடுத்தி அதிலிருந்து வரும் 
விளைபொருட்களும் நச்சுபோருளாக மாறி
மக்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்திருப்பதை 
இப்போதுதான் உணரத்தலைப்பட்டு இயற்க்கை வேளாண்மைக்கு 
திரும்ப வேளான்பெருங்குடி மக்களும் பொதுமக்களும் விழிப்புணர்வு பெற தொடங்கியுள்ளநிலையில் மாடுகளின் அனைத்து கழிவுகளும் 
இயற்கை உரமாகவும், பூச்சி கொல்லியாகவும் பயன்படுகிறது 
என்ற நிலையில் மாடுகளை கசாப்பு கடைகளுக்கு உயிருடன் 
அனுப்புவதை தடை செய்ய வேண்டும். 

சட்டங்களால் எந்த உண்மையான மாற்றங்களையும் ஏற்படுத்தமுடியாது. 

மக்களின் மனதில் அன்பு பயிர் துளிர்த்தால்தான் இந்த கொடுமைக்கு தீர்வு பிறக்கும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக