வியாழன், 4 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-5)


நான் கவிஞனுமில்லை 
நல்ல  ரசிகனுமில்லை (பகுதி-5)

தேர்வுப்பட்டியல் மாவட்ட கல்வி அலுவலருக்கு 
ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.  
அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்று
என் வயிற்றில் புளியை கரைத்தது 
.மாணவன் 14வயதை பூர்த்தி செய்யாமையால் 
தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
 பிறகு அதற்க்கு தவிர்ப்பு ஆணை வழங்கப்பட்டு 
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டேன் .

கணக்கில் மட்டும் குறைந்த அளவு மதிப்பெண்கள் பெற்று
மற்ற இனங்களில் ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்கள்
பெற்று தேர்வு பெற்றுவிட்டேன். 

அதோடு என் கிராமத்து அத்தியாயம் முடிவுபெற்றது. 
ஆனால் அந்த காலத்து கிராமத்து வாழ்க்கை 
மனதில் இன்றும் பசுமையாக உள்ளது
அதை என்றும் மறக்கமுடியாது 

அதுவும் புகை வண்டியில் சென்று 
நான்கு ஆண்டுகள் கல்வி பயின்றது 
பசுமையாக  என்றும் நினைவில் இருக்கும்

புகை வண்டி புகையை கக்கிகொண்டே செல்லும்போது 
வீசிடும் ஜில்லென்ற காற்றும் 
அதில் பயணம் செய்யும் பலவிதமான மனிதர்களும்,
 உணவுப்பண்டங்கள், பழங்கள், வேர்க்கடலை, சோடா,கலர் 
விற்பவர்கள் போடும் சத்தங்களும்.
 இந்த கால மக்கள் அறியாதவை.
 
ஜன்னல் ஓரம் உட்கார்ந்துகொண்டு
 பயணம் செய்வதே ஒரு 
இன்பகரமான அனுபவம்.

பச்சை பசேலென்று  வயல்களும், 
மலைகளும், தோப்புகளும் முகத்தில் 
வேகமாக வீசி அடிக்கும் காற்றும் 
ரயில் தண்டவாளங்களில் ஓடும்போது எழுப்பும் ஓசையும் 
மீண்டும் வாழ்வில் கிடைக்காத அனுபவங்கள்

எஞ்சின் விடும் புகையிலிருந்து  கரி துகள்கள் சில சமயம் 
கண்ணில் விழுந்து துன்புறுத்தும் .

என்ஜின் புறப்படுவதற்கு முன் எழுப்பும் ஒலியும்  
அது கக்கும் புகையும் 
எஞ்சின் ஓடும்போது ஏற்படும் லயமான இசையும் 
இந்த தலைமுறை மக்களுக்கு தெரியாது.
 
டிக்கெட் பரிசோதகர்கள் ஒவ்வொரு பயணிகளாக டிக்கெட்டுகளை 
கேட்பதும் இல்லாதவர்களை அடுத்த நிலையத்தில் 
இறக்கிவிடுவதும் சில நேரங்களில் அபராதம் வசூலிப்பதும் 
பார்க்க வேடிக்கையாக  இருக்கும். 

வியாபாரிகள் வண்டி போய் கொண்டிருக்கும்போதே 
மற்றொரு வண்டிக்கு தாவுவது 
பார்க்கும்போது வயிற்றை கலக்கும்

அந்த காலத்தில் அரை டிக்கெட் 10 பைசாதான் .
பள்ளி விடுமுறைக்கு  முன்னால் சீசன் டிக்கெட்டுகள் 
அதன் காலம் முடிந்துவிட்டால் 
 காசு கொடுத்து டிக்கெட் வாங்கி செல்வது வழக்கம் .
அன்று மிகவும் பசியாக இருந்தமையால் 
பத்து பைசாவிற்கு டிபன் சாப்பிட்டுவிட்டேன். .

கையில் காசில்லாமல் டிக்கெட் வாங்காமல் வண்டியில் ஏறிவிட்டேன்.
என் துரதிஷ்டம் டிக்கெட் பரிசோதகர் நான் ஏறிய வண்டியில் ஏறிவிட்டார். மாட்டிக்கொண்டேன்.முழித்தேன்.

 என் பக்கத்தில் இருந்த நண்பன் சீசன் டிக்கெட்டை 
வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டேன் என்று சொல்லு.
 என்று என்னை தூண்டினான்
ஆனால் என்  மனம் பொய்   சொல்ல ஒப்பவில்லை. 
உண்மையை சொல்லிவிட்டேன். 
இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன் என்றும் கூறினேன். 

அவர் உண்மை பேசியதற்காக என்னை பாராட்டிவிட்டு
 இதுபோல் இனி செய்யாதே  என்று மன்னித்து விட்டு விட்டார். 

அன்று முதல் பொய் சொல்லுவதில்லை 
என்று உறுதி எடுத்துக்கொண்டேன் 
இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன். 
அதனால் நான் பல துன்பங்களை அனுபவித்தாலும் 
மனம் நிம்மதியாக இருக்கிறது. (இன்னும் வரும்)   
 
 

1 கருத்து: