சனி, 6 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-11

நான் கவிஞனுமில்லை 
நல்ல ரசிகனுமில்லை(பகுதி-11)

மேலும் கண்ணன் கூறுகிறான். அர்ஜுனா
நீ உன் கடமையை மட்டும் செய்
அதை ஒழுங்காக செய்.
பலனில் மட்டும் ஆசை வைக்காதே
ஆசைவைத்தால் கடமையை
 ஒழுங்காக செய்ய முடியாது

பலனில் ஆசை வைத்தால்
அதன் விளைவுகள் உன்னை
பற்றிக்கொண்டுவிடும் .
அது வினைகளாக மாறி உன்னை
தொடர ஆரம்பிக்கும்.

மற்ற குழப்பங்களை விட்டுவிட்டு
என்னையே நீ சரணடைந்துவிடு.
நான் உன்னை எல்லா துன்பங்களிலிருந்து
உன்னை காப்பாற்றுகின்றேன். என்றான்

கண்ணனை சரணடைந்துவிட்டேன் . என்ன  
நேரிடினும் சரி ,கடமைகளை
ஒழுங்காக செய்வது என்று முடிவு செய்துவிட்டேன், .

கண்ணன் என்ன எனக்கு கொடுக்கின்றானோ
அது எதுவாயினும் மெளனமாக மன உறுதியுடன்
ஏற்றுகொள்ள முடிவு செய்து
வேலையை விடும் எண்ணத்தையும்,
குடும்பத்தை விட்டு ஓடும்  எண்ணத்தையும்
என் மனதை விட்டு அப்புரப்படுத்திவிட்டேன்.

இனி எனக்கென்று வாழ்க்கை இல்லை
என் குடும்பம், வேலை என்ற இரண்டுதான்
என் குறிக்கோள்களாக கொண்டு விட்டேன்

அலுவலகத்தில் அன்றைய வேலைகளை
கூடிய வரைக்கும் அன்றே முடித்துவிட்டுதான்
 வீடு திரும்புவது என்ற முடிவோடு வேலை செய்தேன். 
என்னுடைய உயர் அலுவலர் எனக்கு
எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை

ஆனால் விதி வேறு வகையில்
 என் வாழ்வில் விளையாட தொடங்கியது.

கண்ணனை சரணடைந்தவர்களின் கதிதான்.
என்ன என்று அவன் பக்தர்களின்
சரித்திரத்தை படித்தவர்களுக்கு தெரியும்.

என்னை சுற்றியுள்ளவர்கள் என் மீது
பொறாமை கொண்டுள்ளனர் என்ற
விஷயம் எனக்கு தெரியாது

எல்லோரும் என்னிடம் சிரித்து
பேசுவதை உண்மை என்று நம்பினேன் .

அவர்கள் என்னை பற்றி தவறான தகவல்களை
 எனக்கு மேல்நிலை அலுவலகத்தில் கூறி என் இடத்தை
கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது.


மேலும் என் மீது லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு மொட்டை ப்கடிதம் போட்டிருக்கிறார்கள் என்றும் எனக்கு தெரியாது.
என் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர்கள்
அரசு உத்திரவுகளை கீழ் மட்ட அலுவலகங்களுக்கு
அனுப்பாமல் காசிற்காக கட்டி போட்டு
வைத்திருப்பதும் எனக்கு தெரியாது.

 பலர் வந்து கேட்கும்போதுதான்
அவைகள் அனுப்புகை பிரிவில் காசிற்காக அனுப்பாமல் வைக்கபட்டிருக்கின்றன என்று தெரிய வந்தது.
ஆனால் அதற்குள் என் பெயர் கெட்டுவிட்டது 

இறைவா நேர்மையாக பணி  புரிந்தும்
எனக்கு இந்த நிலைமையா என்று
இரவும் பகலும் பகலும் தூக்கம் வராமல்
மனம் புழுங்கி தவித்தேன்.

அப்படி இருக்கையில் ஒருநாள் லஞ்ச
ஒழிப்பு அலுவலகத்திலிருந்து ஒரு அலுவலர் வந்து
 என்னிடம் உங்கள் அதிகாரி எங்கே என்று கேட்டார்.

அவர் முகாம் போயிருக்கிறார் என்று சொன்னேன்
அப்படி யானால் அவர் அறையை திறக்க சொல்.
நான் உள்ளே அமர்ந்து கொள்கிறேன் என்று கோரவே
அறையை திறந்து விட்டதும் உள்ளே போய்
அமர்ந்து கொண்டு கதவை சாத்திக்கொண்டார்.
பிறகோ கீழ் நிலை அலுவலகத்திலிருந்து
பல அலுவலர்கள் அவர் அறைக்குள்  சென்று வெளியே சென்றுகொண்டிருந்தார்கள்

 பிறகு அங்கிருந்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் எதற்காக் வந்தார்,ஏன் கீழ்நிலை அலுவலகத்தில்
 பணி புரிபவர்கள் அவர் அறைக்கு வந்து போனார்கள்
 என்ற விஷயம் எனக்கு தெரியாது

சிறிது நாள் கழித்து என் நண்பன்
ஒருவன் உண்மையை கூறியபோது
எனக்கு தூக்கிவாரி போட்டது (இன்னும்வரும்) 

1 கருத்து: