திங்கள், 13 நவம்பர், 2017

இசையும் நானும் (247) திரைப்படம் -புதிய பறவை பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்

இசையும் நானும் (247)  

திரைப்படம் -புதிய பறவை 

பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்
MOUTHORGAN


Movie: புதிய பறவை 
Year of release: 20.7.1964
Producer: சிவாஜி கணேசன்
Director: தாதா மிராசி
Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
Lyrics: கண்ணதாசன்
Singer:பி.சுசீலா
Starcast: Cast: சிவாஜி கணேசன்-சரோஜாதேவி 


பெ: உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்

பெ: காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

பெ: நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

பெ: தனிமையில் கானம் சபையிலே மோனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோண்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்...


ஞாயிறு, 12 நவம்பர், 2017

அனுபவ ஞானம்(10)

அனுபவ ஞானம்(10)

தன்னையே சதா சர்வ காலமும்

நினைக்கும் தன் பக்தனின்

அறிவு,அறியாமை சாத்திரங்களின்படி  வாழ்வு

ஆகியவற்றை கருத்தில் கொண்டு

அருள் செய்வதில்லை.


புற உலகில் பொருள் தேடி

அலையும் மனிதர்கள் உள்ளத்தில்

இருள்தான் குடியிருக்கும்

இருளை விரட்டும்  ஒளிமயமான ஆத்மன்

இதயத்தில் இருக்கும்போது  அதை

வெளியில் தேடி யாது பயன்?எண்ணங்களால் நிரம்பிய மனமே

நீ கற்பூரம்போல் முழுவதும்

கரைந்தாலன்றி  பேரொளியும்

நிலையான ஆனந்தம் தரும்

இன்ப ஊற்றாம் இறைவனை

உணர இயலாதென்று  உணர். 

அனுபவ ஞானம்(9)

அனுபவ ஞானம்(9)

பொறாமை குணம் கொண்டோன்

பிறர் வாழ பொறுத்திடான்

தன்னிடம் உள்ளவற்றைக்

கொண்டும் மகிழ்ந்திடான்.

தாழ்வு மனம் கொண்டு

பிறரை அழித்திடவே

சிந்தனை செய்து தானும்

கெட்டு  அழிவான்


தன்னை நினையாமல்

பிறர் நலம் ஒன்றையே

கருத்தில் கொண்டு வாழ்பவன்

இறைவனுக்கு அருகில்

அவனையறியாமலேயே

கொண்டு செல்லப்பட்டு விடுகிறான். 

சனி, 11 நவம்பர், 2017

அனுபவ ஞானம்(8)

அனுபவ ஞானம்(8)

நல்லவர்களுக்கு செவி சாய்க்கா
இவ்வுலக மாந்தர்கள்
தீயவர்களின் கவர்ச்சிக்கு
அடிமையாகி தீராத
துன்பத்தில் மூழ்குவர்.

அளவுக்கதிகமாக உறங்குபவனும்
அளவுக்கதிகமாக உண்பவனும்
அளவுக்கதிகமாக பாசம் வைத்தவனும்
எதற்கும் பயனின்றி மரணத்தை தழுவுவார்கள்
ராமாயணத்தில் வரும் கும்பகர்ணனைப் போல

உனக்கு பிறக்கும் குழந்தை
இறைவன் உனக்காக தயாரித்து
அளிக்கும் வடிவம் என்பதை உணர்.

அது எப்படி வளரும்
எவ்வாறு இருக்கும்
என்ன செய்யும்  என்பதை
அவன் ஒருவனே அறிவான்.

எனவே உங்கள் குழந்தைகளை பற்றி
எந்த கவலையும் கொள்ள வேண்டா.

அவர்களின் நல்ல செயல்களுக்கு
ஊக்கம் மட்டும் அளித்தால் போதும்.
அனைத்தும் நன்றாக இருக்கும்.அனுபவ ஞானம்(7)

அனுபவ ஞானம்(7)

எல்லா உயிரும் இந்த
உலகில்வாழ விரும்புகின்றன.

அவைகள் இந்த உலகிற்கு
வந்த நோக்கத்தை நோக்கி
தங்கள் கவனத்தை
செலுத்துகின்றன.

அதனால் அவைகளும் வாழ்ந்து
மற்ற உயிர்கள் வாழவும்
உதவியாக இருக்கின்றன. 

ஆனால் மனிதன் மட்டும்
அவன் இவ்வுலகிற்கு வந்த
நோக்கத்தை மறந்துவிட்டு.
பிற உயிர்களுக்கு கேடு
விளைவிப்பதிலேயே
தன் ஆயுள் முழுவதும் வீணடிக்கின்றான்.

அதனால்தான் அவனுக்கு வரும்
துன்பங்கள் எதுவும் தீர்க்க
முடியாத அளவிற்கு இன்று
பெருகிவிட்டது.

தான் செய்த தவறுகளுக்கு
பிறர் மீது பழி போடும் குணம்
அவனுக்கு கை வந்த கலையாகி விட்டது.

இல்லாவிடில் கண்ணுக்கு தெரியாத
கடவுள் மீது வெறுப்பை காட்டி புலம்புகிறான்.

அமைதியாக சிந்தித்தால் புரியும்
தவறு யார் மீது உள்ளது என்று. 

அனுபவ ஞானம்(6)

அனுபவ ஞானம்(6)

பரமனை மறைத்தது

பொன்னும் பொருளும்

பரமன் விரும்புவது

பக்தியும் பொறுமையும்.


உதயத்தில் தோன்றும்

கதிரவனின் ஒளி

நம் உள்ளத்தில் ஒளி வீசும்

ஆன்ம ஒளியின்  பிரதிபலிப்பே

என்று தன்னை உணர்ந்தோர்

கூறும் கூற்றை நம்பு.


மற்ற வழிபாடெல்லாம்.

நினைவிருக்கும் வரையில்தான்.

நினைவிழந்தபின் ஒன்றும் செய்ய இயலாது. 


அனுபவ ஞானம்(5)

அனுபவ ஞானம்(5)

கடமைகளை செய்ய
தவறியவன் என்றும்
காண முடியாது கடவுளை.

கடமைகளை செய்யும்போது
கடவுளை மறப்பவனும்
தன்னை படைத்து
இவ்வுலகில் நடமாடவிட்ட
கடவுளை மறுப்பவனும்
என்றும்  அமைதியாய்
இருக்க முடியாது.

மனதில் அகந்தை கொண்டு 
இறைவனை வெறுத்தால் 
என்ன கிடைக்கும்?

மாலை வெறுப்பவனுக்கு

மால் புகழ் பாடும் மகன் பிறப்பான்.

ஹிரணியகசிபுக்கு பிரகலாதன்

பிறந்ததுபோல் அகந்தையை

வேரோடு அழிக்க.